இன்றைய வேத வசனம் 14.12.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 14.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்... அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.  ஏசாயா 30:18

மிகக்கடினமாய் நடத்தக்கூடிய முதலாளி அமைந்ததால், நீண்டநேரம் மனச்சோர்வோடு வேலைசெய்யக்கூடிய நிலைமை அபினவ்க்கு ஏற்பட்டது. தன் வேலையை விட்டுவிட எண்ணினார். ஆனால் அவனுடைய கடன், மனைவி, இளம்பிள்ளை ஆகிய பொறுப்புகள் அவருக்கிருந்தது. இருந்தாலும் வேலையை விட்டுவிடுவதற்கு அவர் முயற்சித்தார். அவருடைய மனைவி அவரிடத்தில், “நாம் காத்திருக்கலாம், தேவன் நமக்கு என்ன தருகிறார் என்று பார்க்கலாம்” என்றாள். 

பல மாதங்கள் கழித்து அவர்களுடைய ஜெபம் கேட்கப்பட்டது. அபினவ்க்கு புதிய வேலை கிடைத்தது. தன் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. “அத்தனை மாதங்கள் என்பது நீண்ட காலம், ஆனால் தேவனுடைய குறித்த நேரத்தில் வெளிப்படும் அவருடைய திட்டத்திற்காக காத்திருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

பாடுகளுக்கு மத்தியில் தேவனுடைய குறித்த காலத்திற்காக காத்திருப்பது கடினம். அத்தருணத்தில் நம்முடைய திட்டத்தை அரங்கேற்ற தூண்டப்படுவோம்.

இஸ்ரவேலர்களும் அதையே செய்தனர்: சத்துருக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்கு தேவனிடத்தில் திரும்பாமல், எகிப்து தேசத்திடம் உதவி கோரினர் (ஏசாயா 30:2). ஆனால் தேவன் அவர்களிடம், நீங்கள் மனந்திரும்பி என்னை நம்பினால், நீங்கள் பலப்பட்டு, மீட்பைப் பெறுவீர்கள் என்று எச்சரிக்கிறார் (வச. 15). “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” (வச. 18) என்றும் கூறுகிறார். 

தேவனுக்காக காத்திருப்பதற்கு விசுவாசமும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஆனால் தேவனுடைய பதிலை நாம் பெற்றுக்கொள்ளும்போது, காத்திருந்தது நியாயமானது என்பதை நாம் ஒத்துக்கொள்வோம்: “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18). நாம் அவரிடத்திற்கு திரும்புவோம் என்று தேவன் நமக்காக காத்திருப்பதே அதைக்காட்டிலும் ஆச்சரியமானது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!