இந்தியாவில் புதிதாக 5 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Prabha Praneetha
4 years ago
இந்தியாவில் புதிதாக 5 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 5 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3கோடியே 47 இலட்சத்து 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 995பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்து 38 ஆயிரத்து 763 ஆக  காணப்படுகின்றது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் 252 பேர் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 75 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 88 ஆயிரத்து 993 பேர், பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4