புத்தாண்டுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய்
Prabha Praneetha
3 years ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் விஜய்யின் கடைசி நாள் படப்பிடிப்பில் நெல்சன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.