ஓடிடி தளத்தில் வெளியாகும் மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.
மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் மாநாடு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.