திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்த ஜெயலலிதா
Reha
3 years ago
திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.
ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ (United Amateur Artistes – UAA) குழுவினர் நடத்திவந்த நாடகங்களில் ஏற்கனவே ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும் அவருடைய சித்தி வித்தியாவதியும் நடித்து வந்தார்கள்.
வி.கோபால கிருஷ்ணனும் சோவும் கூட அப்போது ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து ஒய்.ஜி.பி குழுவில் நடிக்க வந்த ஜெயலலிதா அப்போதே தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் சரளமாக வசனங்களைப் பேசி நடித்திருக்கிறார்.
இன்றும் ஒய்.ஜி.பி குழுவில் உள்ளவர்கள் ஜெயலலிதாவுடன் நடித்ததை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.