பாடகர் யுகேந்திரன் பிறந்த நாள் டிசம்பர் 20 , 1976
யுகேந்திரன் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.
பிறப்பு யுகேந்திரன் வாசுதேவன் நாயர் 20 திசம்பர் 1976 (அகவை 40) சென்னை , தமிழ் நாடு , இந்தியா பணி நடிகர், பாடகர் செயல்பட்ட ஆண்டுகள் 1987-இன்று வரை வாழ்க்கைத்துணை Hayma Malini
வாழ்க்கை
இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். இவரது சகோதரி பிரசாந்தினி தமிழ் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வானொலியான சுவர்ண ஒலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத்துணையான ஹேம மாலினியைக் கண்டார். இவரது மனைவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இசைப்பயணம்
சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து , சிங்கப்பூர் , மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே”யில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.
திரைப்பயணம்
இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா” மற்றும் “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.