தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

Nila
4 years ago
தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரோன் தொற்று பரவியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இதுவரை 236 பேருக்கு ஒமைக்ரோன் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரோன் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4