பெரியாரை வழிபடுவதா? நடிகர் சித்தார்த் கண்டனம்
Prabha Praneetha
2 years ago
பெரியாரின் 48வது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், பெரியார் சிலை அமைப்பவர்கள், அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துபவர்களை அவர் முட்டாள் என்றே நினைப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். அவரை தெய்வமாக்குவதை நிறுத்துங்கள்.
அவரை மட்டுமல்ல எந்தவொரு மனிதரையும் வழிபடுவதை நிறுத்துங்கள். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவரது கருத்துகளை முன்னெடுத்து செல்லுங்கள்.
ஒவ்வொரு மனிதனும் சமம். தன்மையாக நடந்துகொள்ளுங்கள். சுதந்திரமாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.