பாக்கியராஜ் கொடுத்த வாய்ப்பு.. சீரியல் மூலம் தன்னை நிரூபித்த ராஜு பாய்

Prabha Praneetha
2 years ago
பாக்கியராஜ் கொடுத்த வாய்ப்பு.. சீரியல் மூலம் தன்னை நிரூபித்த ராஜு பாய்

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக்பாஸ் ரசிகர்களின் ஃபேவரட் போட்டியாளர் யார் என்றால் அது ராஜூ தான்.

அதற்கு காரணம் ராஜூவின் திறமையும், முயற்சியும் தான் அவருக்கு இந்த அளவு பெயரை வங்கிதந்துள்ளது.

ராஜு தனக்குள் பல திறமைகளை வைத்து கொண்டு எப்போதுமே சிந்தனையுடனே ஸ்கிரிப்ட் ரைட்டராக வலம் வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கத்தி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான இவர் இத்தொடரின் மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார் ராஜு.

ராஜுவின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு சினிமா மேல் உள்ள ஆசையால் வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்துவிட்டார்.

இங்கு வந்த பலரிடம் வாய்ப்பு கேட்டு அலைந்து பின்பு இயக்குனரும், நடிகருமான பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதன்பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சியில் கவினின் நண்பனாக நடித்திருந்தார்.

இத்தொடரின் மூலம் நட்பு காரணமாக கவின் படத்தில் ராஜூ நடித்திருந்தார். வெள்ளித்திரையில் ராஜுக்கு வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 5 வில் ராஜூ தான் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்பதே பலரது என்னமாக உள்ளது. இதனால் இவர் மீண்டும் வெள்ளித்திரைக்கு சென்று ஜொலிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ராஜு அவருடைய குரு பாக்யராஜுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!