சதுரங்கவேட்டை 2 விரைவில் வேட்டையாட வருகிறது.

Reha
2 years ago
சதுரங்கவேட்டை 2 விரைவில் வேட்டையாட வருகிறது.

சதுரங்க வேட்டை படம் நடிகர் நட்ராஜன், இசாரா நாயர், பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான படம் சதுரங்க வேட்டை. 

இந்தப் படத்தை வலிமை இயக்குநர் எச் வினோத் இயக்கியிருந்தார். மனோபாலா தயாரிப்பில் படம் உருவாகியிருந்தது. 

சிறப்பான வெற்றி படம் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது.  எச் வினோத்தின் திரைக்கதை படத்திற்கு வலுவாக அமைந்திருந்தது.  இந்நிலையில் எச் வினோத் கதை மற்றும் திரைக்கதையில் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. 

படத்தை இயக்கியுள்ளார் நிர்மல்குமார். 2வது பாகம் இந்தப் படத்தையும் மனோபாலா தயாரித்துள்ளார். 
படத்தில் அரவிந்த் சாமி, த்ரிஷாவுடன், பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, யோகிபாபு, சந்திர மௌலி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். 

படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்பில் படம் படம் கடந்த 2016ல் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், ரிலீசுக்கு தயாராகி நீண்ட நாட்களாக கிடப்பில் போடட்டது.

தற்போது வலிமை படத்தின்மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எச் வினோத், இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரவிந்த் சாமி வழக்கு சில மாதங்களுக்கு முன்பு படத்தில் தனது சம்பள பாக்கிக்காக அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே, அவர் யாராலோ தவறாக வழிநடத்துவதாக மனோபாலா குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில் படம் வரும் ஜனவரியில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் உருவாகி ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆன நிலையில், படத்தின் முதல் பாகம் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். 

இந்நிலையில் அடுத்த மாதம் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!