இங்கிலாந்தில் விசித்திரமான குறைபாட்டுடன் பிறந்த அபூர்வ குழந்தை

Keerthi
2 years ago
இங்கிலாந்தில் விசித்திரமான குறைபாட்டுடன் பிறந்த அபூர்வ குழந்தை

இங்கிலாந்தில் விசித்திரமான குறைபாட்டுடன் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கிரேட் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வரும் பவ்லர் (வயது 29)-கார்ல் என்ற தம்பதியினருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்தது.

அந்த குழந்தை 'கேஸ்ட்ரோசைஸிஸ்' என்னும் பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது 'கேஸ்ட்ரோசைஸிஸ்' என்பது குழந்தை தாயின் கருவில் வளரும் போது அதனுடைய முன்புற உடல் சுவர் ஒன்றாக இணைக்க தவறிவிடும் நிலையே ஆகும்.

இந்த பிறவிக் குறைபாட்டால் குழந்தைகளுடைய வயிற்றின் தோல் பகுதி முழுமையாக வளர்ச்சி அடையாமல் சிறிய துவாரம் காணப்படும். மேலும் குழந்தைகள் வளர வளர உறுப்புகள் உடலில் இருந்து வெளியேற ஆரம்பிக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த பாதிப்பு குழந்தையின் வயிற்று பகுதியில் மட்டுமே ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் தான் குழந்தை பிறந்த உடனேயே இந்த அரியவகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் இன்குபேட்டரில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. பின்னர் குழந்தை பிறந்த முதல் வாரத்திற்கு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. அதனை தொடர்ந்து 3 வாரங்கள் குழந்தைகள் மருத்துவமனையிலேயே வைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

ஏனென்றால் குழந்தையின் வயிற்றில் இருந்து உடலுக்கு வெளியே வந்துள்ள உறுப்புகள் காய்ந்து போகாமலும், அதிக வெப்பம் ஆகாமலும் இருக்க மருத்துவர்கள் அந்த குழந்தையை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இங்கிலாந்தில் பிறந்த இந்த குழந்தை பிறந்து தற்போது 5 வாரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த அபூர்வ குழந்தைக்கு "கோயா" ( ஹவாய் மொழியில் 'போராளி' ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மருத்துவர்கள் அந்த குழந்தையின் தாய் கருவுற்ற 12 வாரங்களுக்குப் பிறகே இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை அவரிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.