சமுத்திரக்கனிக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் தெலுங்கு சினிமா..
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக திரைப்படங்களில் கலக்கி வருபவர் சமுத்திரகனி. இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமுத்திரகனியின் பல படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில் அடுத்த ஆண்டும் பல படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கிறது. ரைட்டர், ஆர்ஆர்ஆர், நான் கடவுள் இல்லை, மாறன், டான், அந்தகன், சர்காரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
தற்போது பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் என பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
ராஜமௌலி படத்தில் ஏதாவது ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அந்த விதத்தில் சமுத்திரகனி ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு சம்பளம் வேண்டாம் உங்கள் படத்தில் நடிப்பதே பெரிய பாக்கியம் என்று சொல்லிவிட்டாராம்.
ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனிக்கு ரூ. 2 சம்பளமாக பேசப்பட்டது. இரண்டு என்றால் இரண்டு லட்சமாக இருக்கும் என சமுத்திரகனி நினைத்துள்ளார்.
ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் சமுத்திரகனிக்கு 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த சமுத்திரகனி அதிர்ச்சி அடைந்தாராம்.
ஆர்ஆர்ஆர் படத்திலேயே சமுத்திரகனி 2 கோடி சம்பளமாக கொடுக்க ராஜமௌலியின் மகன் எஸ் எஸ் கார்த்திகேயா தான் காரணமாம்.
சமுத்திரகனியின் நடிப்பு கார்த்திகேயா பிடித்துப்போக அடுத்த படத்திலேயே அவரை கமிட் செய்துள்ளார்.
எஸ் எஸ் கார்த்திகேயா தயாரிக்க உள்ள படத்தில் சமுத்திரக்கனிக்கு சம்பளமாக 1. 5 கோடி கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் தெலுங்கு சினிமாவில் சமுத்திரகனியின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது.