பிரபல இயக்குனருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன். இவர் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர் வரிசையில் இடம்பிடித்தவர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டதோடு விருதுகளையும் அள்ளிக்குவித்தது.
இதனை தொடர்ந்து கல்யாண சமையல் சாதம், மலையாள திரையுலகில் மோகன்லாலை கதாநாயகனாக வைத்து பெருச்சாழி என்ற படங்களை இயக்கினார். இவர் கடைசியாக அர்ஜுன் கதாநாயகனாக நடித்த நிபுணன் திரைப்படத்தை இயக்கியனார். அதற்கு பிறகு குழந்தைகளைக் வைத்து குழந்தைகள் விரும்பும் வகையிலான புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், படப்பிடிப்புக்காக கும்பமேளா, வாரணாசி உள்ளிட்ட பகுதியில் 28 நாட்கள், 160 நபர்களுடன் படப்பிடிப்பை முடித்து அமெரிக்கா திரும்பிய பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒமைக்ரான் தொற்று என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது’ என்று பதிவு செய்துள்ளார்.