விக்ரமை ஏமாற்றிய தயாரிப்பாளர்..

Prabha Praneetha
2 years ago
விக்ரமை ஏமாற்றிய தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் லலித் குமார். இவர் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்போது மகான், கோப்ரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் மகான் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருவதால் படம் எப்போது வெளிவரும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதேபோன்று விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த இரு படங்களும் ஆரம்பித்து பல நாட்கள் ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது.

இரு படங்களின் இயக்குனர்களும் படத்தை சீக்கிரம் முடிக்காமல் இழுத்து கொண்டே போவதாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் இரு படங்களையும் தியேட்டரில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டால்தான் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். மாறாக இந்த படங்களை ஒடிடியில் வெளியிட இயக்குனர்களுக்கு விருப்பம் இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் இந்த திரைப்படங்களை இவ்வளவு நாட்கள் நீடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
 

மேலும் இப்படம் ஓடிடியில் வெளிவருவதை விக்ரமின் ரசிகர்களும் அவ்வளவாக விரும்பவில்லை. தயாரிப்பாளரின் இந்த முடிவு அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது

தற்போது தயாரிப்பாளர் இந்த இரு படங்களை தவிர்த்து மேலும் சில படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்காக அவர் பல நல்ல கதைகளை கேட்டு வருகிறார் அதில் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் பாராட்டை பெற்ற ரைட்டர் திரைப்படம் அவரை மிகவும் கவர்ந்துள்ளது.

இதனால் அந்தப் படத்தின் இயக்குனர் பிராங்கிளினை தான் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்திற்கு புக் செய்துள்ளார். அவர்கள் இருவரும் இணையும் அந்த படத்தினை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

மேலும் சினிமா குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!