புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Prasu
2 years ago
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘டாக்டர்’ படம் வெளியானது. இதையடுத்து அவரது நடிப்பில் ‘டான்’, ‘அயலான்’ படங்கள் வெளிவர தயாராகி வருகிறது.
இந்நிலையில் , சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படமான SK20 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், SK20 படத்தை பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்வுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இப்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சினிமா குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.