ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட விஜய் சேதுபதி..
சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் நடிகர்கள் அவர்களின் சம்பளத்தை உயர்த்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயனும், மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்புவும் அவர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தினார்கள். ஒரு படம் ஹிட்டானலே அவர்களின் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள்
இந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. தற்போது தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியிடம் வெப் தொடரில் நடிக்க பிரபல ஓடிடி தளம் ஒன்று அணுகியுள்ளது.
தற்போது படங்களைவிட வெப் தொடர்கள் தான் அதிகரித்து வருகிறது. நடிகர்களும் வெப் தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தான் அந்த பிரபல ஓடிடி தளம் புதிய வெப் தொடரில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியுள்ளது.
அவர்கள் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதால் விஜய் சேதுபதியும் அந்த தொடரில் நடிக்க முழு சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் அந்த வெப் தொடரில் நடிக்க தனக்கு சம்பளமாக சுமார் 30 கோடி வேண்டும் என விஜய் சேதுபதி டிமாண்ட் செய்துள்ளார்.
இதனால் அந்த தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி வழக்கமாக படங்களுக்கு 12 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்குவாராம். அதுவும் வெறும் 30 நாள் கால்ஷீட்டிற்கு தான் இந்த தொகை. ஆனால் வெப் தொடர் என்பதால் கால்ஷீட் நாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால் 30 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளார். இதனால் தொடரின் தயாரிப்பாளர் ,மற்றும் இயக்குனர் உங்க சங்காத்தமே வேண்டாம் என கூறி தலைதெறிக்க ஓடி விட்டார்களாம்.
மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்