கனடாவில் உறைபனியால் காணாமல் போகும் ஓடை நீர்(வீடியோ பதிவு உள்ளே )

Keerthi
2 years ago
கனடாவில் உறைபனியால் காணாமல் போகும் ஓடை நீர்(வீடியோ பதிவு உள்ளே )

கனடா நாட்டில் உறை பனியிலிருந்து வெளிவந்த நீர், திடீரென்று மறைந்து போகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கனடாவில் இருக்கும் Squamish என்ற பகுதியில் வெப்பநிலை குறைவால் நிலப்பரப்பில் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் உறைபனி மீது வெளியேறிய ஓடை நீர் திடீரென்று கானல் நீர் போன்று மறைந்துவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோ தற்போது வரை 8 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

மேலும், Squamish மற்றும் Vancouver ஆகிய 2 பகுதிகளில் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிக குளிர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், வானிலை ஆராய்ச்சியாளரான Jessie Uppal என்பவர் கூறியிருப்பதாவது, குறைவான வெப்பநிலை மற்றும் வரலாறு காணாத பனியால் ஓடை நீர் மறைகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், பனிக்கு உள்ளிருக்கும் நீர் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. எனவே தான் அது அடிக்கடி வெளியாகிறது. நீர் வெளியேறும் சமயத்தில், குறைவான வெப்பநிலை இருப்பதால் மீண்டும் பனி மாறுகிறது. இது தான் ஓடை நீர் காணாமல் போவது போன்று நமக்கு தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்