இந்தியாவில் 3 ஆயிரத்தைக் கடந்தது ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Prabha Praneetha
4 years ago
இந்தியாவில் 3 ஆயிரத்தைக் கடந்தது ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேருக்கும், அதற்கு அடுத்தப்படியாக டெல்லியில் 465 பேருக்கும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கமும் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், ஒமிக்ரோன் பாதிப்பு மிகப்பெரிய சவாலாக அமையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்திய செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4