எரிவாயு தட்டுப்பாடு:  15,000 உணவகங்கள் மூடப்பட்டன

#Laugfs gas #Litro Gas
Prathees
2 years ago
எரிவாயு தட்டுப்பாடு:  15,000 உணவகங்கள் மூடப்பட்டன

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொடரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கொழும்பில் உள்ள சில நட்சத்திர ஹோட்டல்களும், வெளியூர்களில் உள்ள பல முன்னணி ஹோட்டல்களும் விறகு அடுப்புகளை பயன்படுத்தியுள்ளதாக ஹோட்டல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலுள்ள சில முன்னணி ஹோட்டல்களில் பயன்படுத்துவதற்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை நிர்வகிப்பதற்காக மேலதிக விறகு அடுப்புகளை பயன்படுத்த வேண்டியுள்ளதாக கொழும்பில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

நாட்டில் எரிவாயு விநியோகம் இன்னும் மீளவில்லை, எரிவாயு விநியோகத்தில் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்