சீமெந்து தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகளுக்கு பாதிப்பு

Prabha Praneetha
2 years ago
சீமெந்து தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகளுக்கு பாதிப்பு

சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சீமெந்து தட்டுப்பாட்டின் காரணமாக கட்டட நிர்மாண பணிகள் நூற்றுக்கு 50 சதவீதம் முழுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கட்டட நிர்மாண சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலைமையின் காரணமாக அநேகமான நிர்மாண பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாமல், பணியாளர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சராசரியாக ஒரு சீமெந்து மூடைக்கு 1375 ரூபா விற்பனை விலையாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக 1500 ரூபாவிலிருந்து 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தட்டுப்பாடு காரணமாக இந்த விலையில் சீமெந்து கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனா்.

கட்டட பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கிடைத்தாலும் கோரப்படும் சீமெந்தை விட குறைந்தளவான சீமெந்தே கிடைக்கபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்