ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேராயர் மெல்கம் ரஞ்சித்திற்கு  எழுந்துள்ள சந்தேகம் 

#Colombo
Prathees
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேராயர் மெல்கம் ரஞ்சித்திற்கு  எழுந்துள்ள சந்தேகம் 

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தப்பட்டதா என்பது சந்தேகம் என பேராயர் மெல்கம்  ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஜூம் தொழில்நுட்பம் மூலம்

நேற்று நடந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களுக்கு அறிவூட்டுவதற்காக நேற்று ஜூம் தொழில்நுட்ப மாநாட்டிற்கு பேராயர் மெல்கம்  ரஞ்சித் தலைமை தாங்கினார்.

சஹாரானை கைது செய்வதற்கான பிடியாணையை வைத்திருந்த போதே பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில்,  ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு நாட்டில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் நோக்கில் கிடைத்துள்ள புலனாய்வுத் தகவல்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் தீவிரவாதிகள் இதை தயார் செய்தது உண்மைதான்.

 ஆனால், தெரிந்தே தகவல்களை மறைத்து மக்களின் வாக்குகளைப் பெறவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாக்குதலுக்கு 60மூ பொறுப்பு.

இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் இதை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நபர்கள் விசாரணையில் இருந்து தகவல்களைப் பெற விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்