இலங்கையில் இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்!

#SriLanka #School
Nila
2 years ago
இலங்கையில்  இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (10) முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக கல்வி நடவடிக்கைகள் இடைக்கிடை தடங்கல் ஏற்பட்ட நிலையில், கடந்த சில காலமாக மாணவர்கள் வகுப்பிற்கு பகுதி பகுதியாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளை திறப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அதனால், பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் வெளியிலிருந்து உணவை எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டியை பின்பற்றுமாறு கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்