ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்கிறேன் – நாமல்

Prabha Praneetha
2 years ago
ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்கிறேன் – நாமல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், எனினும் இது தற்காலிகமானது என்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இதேநேரம், இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு எனவும் ஆனால் பொறுப்பான அதிகாரிகளால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு பதவியேற்றவுடன், ரசாயனமற்ற உரத்திற்கு மாறுவதற்கான தனது முடிவை ஜனாதிபதி அறிவித்ததாகவும் ஆனால் அதிகாரிகள் அதைத் தொடராததால் அதைத் தவறவிட்டதாகவும் நாமல் கூறியுள்ளார்.

ரசாயன உரத்திற்கு மாறுவதற்கான செயன்முறை உள்ளது என்பது உண்மைதான் என்றும் அது 10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படாததால் இறுதியாக ஜனாதிபதி கடுமையான தீர்மானமொன்றை எடுக்க நேரிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தலைவர்கள் தங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக இதைச் செய்ய வேண்டும் என்றும் நாமல் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்