இன்றைய வேத வசனம் 17.01.2022

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 17.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு... அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்.  எபிரெயர் 12:2-3

ஏப்ரல் 3, 1968 அன்று மாலை அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் அமைந்திருந்த மெம்பிஸ் என்ற நகரத்தை ஒரு பயங்கரமான புயல் தாக்கியது.

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், உடல் நலமின்மையால் சோர்ந்திருந்தார். எனவே அவர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக  சொற்பொழிவை திருச்சபையில் நிகழ்த்த தீர்மானிக்கவில்லை.

அவருடைய பேச்சைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் வந்திருந்தனர். எனவே அவர் அங்கு சென்று நாற்பது நிமிடங்கள் சொற்பொழிவாற்றினார். “நான் மலையுச்சியிலிருந்து” என்று தலைப்பிடப்பட்ட அந்த சொற்பொழிவே அவரின் மிகச்சிறந்த சொற்பொழிவாகக் கருதப்படுகிறது.

மறுநாள் லூதர் கிங் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனாலும் அவருடைய சொற்பொழிவு வருத்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் குறித்த நம்பிக்கையைக்  கொடுத்தது.

எபிரெயர் நிருபம், யூத விசுவாசிகள் கிறிஸ்துவின் மீது வைத்த விசுவாசத்திற்காக அச்சுறுத்தல்களை சந்தித்தபோது, அவர்களை உற்சாகப்படுத்த எழுதப்பட்டது. “ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி (எபிரெயர் 12:12) என்று அவர்களை உற்சாகப்படுத்துகிறது.

அவர்கள் யூதர்கள் என்பதினால் அந்த ஏவுதல் உண்மையிலேயே ஏசாயா தீர்க்கதரிசியிடத்திலிருந்து வருகிறது என்று அறிவர் (ஏசாயா 35:3). ஆனால் இப்பொழுது கிறிஸ்துவின் சீஷர்களாய் நாம் “விசுவாசத்தை துவக்கிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” அழைக்கப்பட்டிருக்கிறோம் (எபிரெயர் 12:1-2).

நாம் அவ்வாறு செய்யும்போது இளைப்புள்ளவர்களாய் நம்முடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகமாட்டோம் (வச. 3). புயல், பெருங்காற்று, மழை ஆகியவைகள் நம்முடைய வாழ்க்கையிலும் வீசும். ஆனால் நாம் இயேசுவில் நிலைப்பதின் மூலம் வாழ்வின் கடும்புயலைக் கடக்கமுடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!