இன்றைய வேத வசனம் 20.01.2022
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
எல்லா ஆவியின் வரங்களும், எல்லா விசுவாசிகளிடமும், இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் எல்லா ஆவியின் கனிகளும் தேவ பிள்ளைகளின் வாழ்க்கையில் நிறைந்து காணப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
கனி கொடுக்கும் ஜீவியமாய் உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டுமானால், உங்கள் உள்ளம் நல்ல நிலமா இருக்க வேண்டும். உங்கள் உள்ளத்தைப் பண்படுத்தி. உபவாசத்தினாலும், ஜெபத்தினாலும் உழுது, தேவ வசனம் உங்களில் விதைக்கப்பட்ட இடங்கொடுங்கள்.
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், (ஏசாயா 55:10,11)
உங்களில் கனி நிறைவாயிருக்க வேண்டுமானால், நீங்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நிற்கும் மரம் போல் இருக்க வேண்டும். உங்கள் உள்ளத்தின் ஆழம், நீர்க்காலகிய பரிசுத்தாவியானவரோடு இடைவிடாமல் தொடர்பு கொண்டிருக்கிறது மட்டுமல்ல, ஆவியானவரின் வல்லமை, கிருபைகள், உங்களுக்குள் இறங்கிக்கொண்டே இருக்க வேண்டும். (சங் 1:2,3)
அப்பொழுது, நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பீர்கள்;
கர்த்தர் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்கள் பாரம்பரியமான பகட்டு இலைகளையல்ல; கனிகளையே!! ஆமென்!
மத்தேயு 7:19,20
நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.