இன்றைய வேத வசனம் 22.01.2022
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)(
நான் தான் கடவுள் என்று சொல்லும் சிலரைப் பார்த்து இருப்போம் கேள்விப்பட்டு இருப்போம்.
ஆனால், இயேசு கிறிஸ்து நமக்கு தெள்ளத்தெளிவாக கற்றுக்கொடுக்கிறார், நீங்கள் கடவுள் அல்ல கடவுள் தங்கும் ஆலயம் என்பதாக.
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (கொரிந்தியர் 3:16)
உலகில் நடக்கிற காரியங்களை நீங்கள் கவனித்துபார்த்தீர்களானால், கடவுளால் படைக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் தங்களை கடவுள் என்று சொல்லும்போது அவர்கள் வாழ்வில் அத்துமீறல், ஒழுங்கின்மை மற்றும் அராஜகம் இருக்கும்.
இதை நான் உங்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று இல்லை. தினமும் செய்தி நாளிதழ்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் நீங்கள் பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்.
அதே நேரத்தில் நான் ஒரு சர்வ சாதாரண மனிதன் ஆனால் சர்வ உலகத்தையும் படைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்குள் வாசம் செய்கிறார் என்று உணர்ந்தவர்களின் வாழ்க்கையில் தாழ்மை இருக்கும்.
ஏனென்றால், அந்த தாழ்மையை அவனுக்குள் வாசமாயிருக்கிற அந்த இறைவனே கொடுக்கிறார்.
அவனுக்கென்று ஒரு கண்ணியம் இருக்கும். ஏனென்றால், அவனுக்குள் வாசமாயிருக்கிற தேவன் அவனுக்கு அந்த கண்ணியத்தை கொடுக்கிறார்.
அவனுக்கென்று சுயநலமில்லாத பிறநலம் கொண்ட ஒரு உயர்ந்த லட்சியத்தை அவனுக்குள் வாசம் செய்கிற இயேசு சுவாமி கொடுக்கிறார்.
மொத்தத்தில் கடவுள் தங்குகிற ஆலயமாக இருக்கிற மனிதன், தான் வாழும் இடத்தில் சரியான ஒரு முன்மாதிரியாக இருப்பான்.
ஆமாங்க, ஒரு மனிதனுக்குள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வாசம் செய்தால், அவன் அந்த கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு வெளி காட்டுகிறவனாக இருக்கிறான்.
அதேபோன்று கடவுளின் அன்பை வெளிகாட்டியவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், நாம் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் அன்னை தெரேசா அம்மையார்.
அவர்கள் எத்தனை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார்கள் என்பது இந்த முழு உலகத்திற்குமே தெரியும்.
அவர்களைப்போல மற்றொரு உதாரணம் ஐடாஸ் சோபியா ஸ்கட்டர். அவர்களிடம் இயேசு கிறிஸ்து இருந்தபடியால், கிறிஸ்துவின் அன்பை வேலூர் பகுதிகளில் பிரதிபலித்தார். CMC மருத்துவ மனையையும் நிறுவினார்கள்.
இதே போன்று இயேசு கிறிஸ்துவை தனக்குள் வாசம் செய்ய அனுமதித்த எத்தனையோ பேர் அந்த இயேசு கிறிஸ்துவின் அன்பை மக்களிடம் பிரதிபலித்தார்கள். தங்கள் வாழ்க்கையை மக்களுக்காகவே அர்ப்பணித்தார்கள்.
இதுதான் ஒரு மனிதனுக்குள் கடவுள் வாசம் செய்தால் நடக்கும் மாற்றங்கள்.ஆனால், நான் தான் கடவுள் என்று சொல்லும் நபர்களால் இந்த தேசத்திற்கு ஏதாவது நன்மை உண்டா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்!
உறுதியாக ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கடவுள் கடவுள் தான்! மனிதன் மனிதன் தான்!
இயேசு கிறிஸ்துவை மட்டும் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை மட்டும் பின்பற்றுபவர்களுக்கு, ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரியும் நான் கடவுள் அல்ல கடவுளின் பிள்ளை என்பதாக. ஆமென்!!
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். (ஏசாயா 42:8)