நாளை தமிழக தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆகும் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’

#TamilCinema #Film #Ahanda
நாளை தமிழக தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆகும் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’

நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ நாளை தமிழகத் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான ‘அகண்டா’ உலகம் முழுக்க வசூலை குவித்து வருகிறது. 20 நாட்களைக் கடந்தப்பின்னும் ஆந்திரா, தெலங்கானாவில் தற்போதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரூ. 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார். ஏற்கெனவே, ’லெஜெண்ட்’, ‘சிம்ஹா’ உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தெலுங்கு திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. சமீபத்தில் ‘அகண்டா’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. தமிழகத்தில் கிடைத்த வரவேற்பால் நாளை 28 ஆம் தேதி தமிழகத்தில், தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

மேலும் சினிமா தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!