நடிகை சுருதிஹாசன் பிறந்த நாள் 28-1-2022

#TamilCinema #Actress #history
நடிகை சுருதிஹாசன் பிறந்த நாள் 28-1-2022

சுருதிஹாசன் ( Shruti Haasan , பிறப்பு: சனவரி 28 , 1986 ) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.

இளமைப்பருவம்

சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும்,
மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.  பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.

கலைத்துறை பாடகர்

சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்  , ஹேராம் ( தமிழ் மற்றும் இந்தி ), என்மன வானில், வாரணம் ஆயிரம் , லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.

நடிப்பு

இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.

இசையமைப்பு

2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.