இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.51 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

#India #Covid 19 #today
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.51 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.51 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தினசரி தொற்று உறுதியாவோர் விகிதம் 15.88% என்றாகியுள்ளது. வார அடிப்படையில் இந்த எண்ணிக்கை 17.47% என்றாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3.80 கோடி என்று உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 21,05,611 என்றாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15.82 லட்சம் கொரோனா பரிசோதனைகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 72.37 கோடி என்றாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4