இந்தி சினிமாவின் பிரபல முன்னணி நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி
Keerthi
2 years ago
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தி சினிமாவின் பிரபல முன்னணி நடிகைளில் ஒருவரான நடிகை கஜோலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவலை அவர் சமூக வலைதள பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.