நாம் யுத்தம் விரும்பிகள் அல்ல. ஆனால் அமெரிக்கா அதை விரும்புகிறது. ரஸ்யா சாடல்.

Keerthi
2 years ago
நாம் யுத்தம் விரும்பிகள் அல்ல. ஆனால் அமெரிக்கா அதை விரும்புகிறது. ரஸ்யா சாடல்.

ரஷ்யாவை யுத்தத்திற்குள் இழுத்துவிட அமெரிக்கா பாரிய பிரயத்தனத்தை செய்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

பல வாரங்களுக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் முக்கியமானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனை தலைநகர் மொஸ்கோவில் வைத்து விளாடிமீர் புட்டீன் சந்தித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட விளாடிமீர் புட்டீன், உக்ரையினின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறையுடன் அமெரிக்கா இருப்பதாக தெரியவில்லை எனவும் ரஷ்யாவின் அபிவிருத்தியை தடுப்பதே அவர்களின் பிரதான இலக்காக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இலக்கை அடையும் நோக்குடனேயே உக்ரையினில் ரஷ்யாவை போருக்கு இழுத்துவிடும் முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டுவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மோதலைப் பயன்படுத்தி, ரஷ்யாவிற்கு எதிராக மேலதிக தடைகளை விதிப்பதே அமெரிக்காவின் இலக்கு எனவும் அவர் சாடியுள்ளார்.

ஐரோப்பாவில் நேட்டோ இராணுவ கூட்டணி தொடர்புபட்ட தமது நாட்டின் கரிசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது எனவும் விளாடிமீர் புட்டீன் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபரின் பதில் இவ்வாறு இருக்க, உக்ரையினுடனான எல்லைப் பகுதியில் ரஷ்யா பாரிய அளவில் படைகளை குவித்துள்ளதை அடுத்து போர் பதற்றமும் நீடிக்கின்றது.

உக்ரையின் மீது ரஷ்யா படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்தாலும் உலக யுத்தம் என ஒன்று ஏற்ப்பட்டால், அதற்க்கு இரையாவது வறிய நாடுகளே.
ஆம் யுத்தமே உலகில் ஒரு தொற்றுநோய். நாம் அதை வெறுப்போம்.