உலகளவில் இதுவரை 38.81 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Keerthi
2 years ago
உலகளவில் இதுவரை 38.81 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் இதுவரை மொத்தமாக 38.81 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உலகளவில் இதுவரை மொத்தமாக 38.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதுவரை மொத்தமாக 57.29 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை மொத்தமாக 30.76 கோடி பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் 2.74 லட்சம் பேருக்கும், அமெரிக்க நாட்டில் 2.20 லட்சம் பேருக்கும், ஜெர்மனி நாட்டில் 2.40 லட்சம் பேருக்கும், பிரேசில் நாட்டில் 2.86 லட்சம் பேருக்கும், இந்தியா-1.47 லட்சம், இத்தாலி - 1.12 லட்சம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.