இன்றைய வேத வசனம் 09.02.2022: ஜீவன் எப்படிப்பட்டது?
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. யாக்கோபு 4:17
பண்டைய அறிஞர்கள் ஜெரோம் மற்றும் டெர்டுலியன், பண்டைய ரோமாபுரியின் கதைகளை குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றனர், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றிக்கு பின்னர் ஜெயம் பெற்ற அந்த தளபதி ஒளிருகின்ற ஒரு ரதத்தின் மேலேறி தலைநகரின் நடைபாதைகளில் விடியற்காலம் தொடங்கி பொழுதுசாயும் வரை உலா வருவாராம்.
ஜனங்களும் ஆரவாரம் செய்வார்கள். அந்த தளபதி பெருமிதம் பொங்க, தன் வாழ்நாள் சாதனையான இந்த கௌரவதால் மகிழ்ச்சி அடைவார். எனினும், புராணத்தின்படி அந்த தளபதிக்கு பின்னால் ஒரு பணியாள் நாள்முழுதும் நின்றுகொண்டு அவரது காதில், “மெமென்டோ மோரி” (லத்தீனில் “நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்” என்று அர்த்தம்) என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே இருப்பானாம். அனைத்து பாராட்டுகள் மத்தியில், தளபதிக்கு தான் சாவுக்குரியவன் என்ற நினைப்பு அவன் தாழ்மையாய் இருக்க மிக அவசியப்பட்டது.
யாக்கோபு பெருமை நிறைந்த விருப்பங்களினாலும், தன்னிறைவால் புடைத்துபோன கர்வத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு எழுதினார். அவர்களுடைய ஆணவத்தை எதிர்த்து,” தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று” (யாக்கோபு 4:6) என்று உருவகுத்தும் வார்த்தைகளை பேசினார். “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்” (வ.10) என்பதே அவர்களுக்கு தேவைப்பட்டது.
மேலும் அவர்கள் எவ்வாறு தாழ்மையடைய முடியும்? அந்த ரோம தளபதிகளை போல அவர்களும், தாங்கள் ஒரு நாள் மரிப்பார்கள் என்பதை நினைவுகூர வேண்டும். “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.” (வ.14) என்று யாக்கோபு வலியுறுத்தினார். அவர்களுடைய பெலவீனங்களை ஒப்புக்கொள்வதே புகையைப்போல காணாமல் போகும் அவர்கள் முயற்சிகளில் வாழ்வதற்கு மாறாக தேவனுடைய சித்தத்தின் கீழ் திடமாக வாழ அவர்களை விடுவித்தது (வ.15)
நம்முடைய நாட்கள் குறுகியது என்பதை நாம் மறக்கும்போது, அது பெருமைக்கு வழிவகுக்கும். ஆனால் நாம் சாவுக்குரியவர்கள் என்பதை புரிந்து தாழ்மைப்படும்போது, நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மூச்சும் தேவ கிருபையாக பார்ப்போம்.