இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 12-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 12-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தவறு

தவறை மன்னிக்கும்
மனநிலை
உள்ளவருக்கே
தவறை கண்டிக்கும்
அதிகாரம் உண்டு....!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-ஆபத்து

ஏழையிடம் நீ வாங்கும்
சாபமும்
பணக்காரனிடம் நீ வாங்கும்
பாராட்டும்
ஆபத்தானவை...!!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-பரிசு

பரிசளிக்க விரும்பினால்...
பகைவனுக்கு மன்னிப்பை பரிசளி...
தந்தைக்கு நல்ல மரியாதையை பரிசளி....
தாய்க்கு பெருமையை பரிசளி....
உடன் பிறந்தவருக்கு நேசத்தை பரிசளி...
நண்பனுக்கு உன் உள்ளத்தை பரிசளி....
உன் மனச்சாட்சிக்கு நம்பிக்கையை பரிசளி....
உறவுகளுக்கு உன் உணர்வை பரிசளி
எல்லா மனிதனிடமும்
தாராள குணத்தை பரிசளி...

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்வு

வாழ்வில்
பிறர் ஏற்படுத்திய
காயங்களை மனதில்
சுமந்து கொண்டு
செல்லாதீர்கள்...!
எது முக்கியம்
எது தேவையற்றது
என்பதைப் பகுத்துப்
பாருங்கள்.
அப்படி பார்க்கத்
தெரிந்துவிட்டால்,
வாழ்வு என்றென்றும்
ஆனந்தமே....!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-மகிழ்ச்சி

இருப்பதை வைத்து
மகிழ்ச்சியாக
வாழத்தெரிந்தால்
அதைபோல் ஒரு சொர்க்கம்
இல்லை
இல்லாததை நினைத்து
கவலைப்பட்டு கொண்டே
வாழ்ந்தால் அதை விட
வேறு நரகமும் இல்லை