தமிழ் நாடு, சென்னையில் ப்ரீபயர் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் எடுத்த விபரீத முடிவு

#India #Tamil Nadu #Police
தமிழ் நாடு, சென்னையில் ப்ரீபயர் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் எடுத்த விபரீத முடிவு

சென்னை புழலில் செல்போனில் ப்ரீபயர் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா. இவர், கடந்த 7 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனது மகன் சுரேஷுடன் (16) தனியாக வசித்து வந்துள்ளார். சுரேஷ் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவன் சுரேஷ் வீட்டில் சரியாக படிக்காமல் எந்நேரமும் செல்போனில் ப்ரீபயர் கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் தாய் மீனா மகன் சுரேஷை கண்டித்துள்ளார். இந்த நிலையில் வெகுநேரமாகியும் மகனை காணாததால் பல இடங்களில் தேடிய நிலையில் எதிரில் ஆளில்லாத பழைய வீட்டில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த புழல் போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4