காட்ஃபாதர் திரைப்படம் - நயன்தாரா போட்டோவுடன் படம் சம்பந்தமான தகவல்கள் வெளியாகியுள்ளன
நயன்தாரா நடித்து வரும் காட்ஃபாதர் படத்தின் முக்கிய ஷெட்யூர் நிறைவடைந்ததாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா படங்களையும் தயாரித்து வருகிறார்.
பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ள நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் லையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது கோல்டு, காட்ஃபாதர், கனெக்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.
இதில் காட்ஃபாதர் படத்தை சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்தப் படம் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும்.
மலையாள மொழியில் மோகன் லால், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, விவேக் ஓபராய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய ஷெட்யூல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் முடிந்ததாக இயக்குநர் மோகன் ராஜா, தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் எக்ஸைட்டிங் அப்டேட்ஸ் விரைவில் என்றும் நயன்தாராவுடன் உள்ள போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் மோகன் ராஜா. இயக்குநர் மோகன் ராஜாவுடன் நயன்தாரா இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.