அர்ஜுன விஷாத யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 49.

#history #Article #Tamil People
அர்ஜுன விஷாத யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 49.

முதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥

அத ப்ரதமோத்யாய

அர்ஜுன விஷாத யோகம்

(குழப்பமும் கலக்கமும்)


த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥

திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்சயா ! தர்மபூமியாகிய குருக்ஷேத்திரத்தில் போர் செய்வதற்காக கூடி நின்ற என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்.

ஸம்ஜய உவாச।
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥

சஞ்ஜயன் கூறினார்: அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்து விட்டு அரசனாகிய துரியோதனன் ஆச்சார்ய துரோணரை அணுகி கூறினான்.

பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥

ஆசாரியரே ! உமது சீடனும் புத்திசாலியும் துருபதனின் மகனுமான த்ருஷ்டயும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் பெரிய படையை பாருங்கள்.

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।
யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥

த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥

யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥

சாத்யகி, விராடமன்னன், மகாரதனான துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், பலசாலியான காசி மன்னன், புருஜித், குந்தி போஜன், மனிதருள் சிறந்தவனான சிபியின் வம்சத்தில் வந்த மன்னன், பராகிரமசாலியான யுதாமன்யு, பலசாலியான உத்தமௌஜன், அபிமன்யு ,திரௌபதியின் பிள்ளைகள் என்று பீமணுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான பெரிய வில் வீரர்கள் பலர் பாண்டவர் படையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாரதர்கள்.

அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥

மனிதருள் சிறந்தவரே ! நமது படையில் சிறந்த தலைவர்களாக உள்ளவர்களையும் உங்களுக்கு கூறுகிறேன். தெரிந்துகொள்ளுங்கள்.

பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥

அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥

துரோனாச்சாரியராகிய நீங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றி வீரரான கிருபர், அசுவத்தாமன், விகர்ணன், சொமத்தத்தனின் மகனான பூரிசிரவஸ், ஆகியோருடன் மேலும் பல வீரர்களும் உள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இவர்கள் போரில் வல்லவர்கள், என்னக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥

பீஷ்மர் காக்கின்ற நமது படை அளவற்று பறந்து கிடக்கிறது. பீமன் காக்கின்ற பாண்டவர் படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது.

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥

நீங்கள் எல்லோரும் உங்கள் அணிவகுப்புகளில் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு பீஷ்மரையே காக்க வேண்டும் .

தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥

வல்லமை பொருந்தியவரும் குரு வம்சத்தில் மூத்தவரும் பாட்டணுமான பீஷ்மர் துரியோதனனுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக சிம்ம கர்ஜனை போன்ற உரத்த ஒலியை எழுப்பினார் .சங்கையும் ஊதினார் .
தத: ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா:।
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோ அபவத்॥ 1.13 ॥

அதன் பிறகு சங்குகளும் பேரிகைகளும் தப்பட்டைகளும் பறைகளும் கொம்புகளும் திடிரென்று முழங்கின. அது பேரொலியாக இருந்தது.

தத: ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ।
மாதவ: பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதக்மது:॥ 1.14 ॥

பிறகு வெண்ணிற குதிரைகள் பூட்டிய பெரிய ரதத்தில் இருந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் தெய்வீகமான சங்குகளை உரக்க ஊதினார்கள்.

பாம்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநம்ஜய:।
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வ்ருகோதர:॥ 1.15 ॥

ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும், பெரும் செயல் ஆற்றுபவனாகிய பீமன் பௌன்ட்ரம் என்ற பெரிய சங்கையும் ஊதினார்கள்.

அநம்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:।
நகுல: ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ॥ 1.16 ॥

குந்திதேவியின் மகனான யுதிஷ்டிரர் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலன் சகாதேவனும் ஷுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.

காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ: ஷிகண்டீ ச மஹாரத:।
த்ருஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித:॥ 1.17 ॥

த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ: ப்ருதிவீபதே।
ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு: ஷங்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்॥ 1.18 ॥

மன்னா ! சிறந்த வில்லாளியான காசி மன்னனும் மகாரதனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராடமன்னனும், வெல்ல முடியாதவனான சாத்யகியும், துருபத மன்னனும், திரௌபதியின் பிள்ளைகளும், தோல்வலிமை பொருந்திய அபிமன்யுவும் பிரகுவும் தனித்தனி சங்குகளை ஊதினார்கள்.

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்।
நபஷ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யநுநாதயந்॥ 1.19 ॥

ஆகாயத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த பேரொலி கௌரவர் கூட்டத்தின் இதயங்களை பிளந்தது.

அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:।
ப்ரவ்ருத்தே ஷஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:॥ 1.20 ॥

மன்னா ! அதன்பிறகு அனுமக்கொடியை உடையவனான அர்ஜுனன் போரை ஆரம்பிப்பதற்கு தயாராக நின்ற கௌரவர் அணியையும் ஆயுதங்கள் பாய தயாராக இருந்ததையும் கண்டு வில்லை உயர்த்தியபடி ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த வார்த்தைகளை கூறலானான்.

அர்ஜுன உவாச।
ஹ்ருஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே।
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத॥ 1.21 ॥

யாவதேதாந்நிரிக்ஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்।
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே॥ 1.22 ॥

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! இரண்டு அணிகளுக்கும் இடையே எனது ரதத்தை நிறுத்து. யார் யாருடன் போர் செய்ய வேண்டும். போரிடுவதற்கு ஆவலுடன் வந்திருப்பவர்கள் யார்யார் என்பதை பார்கிறேன்

யோத்ஸ்யமாநாநவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர ஸமாகதா:।
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:॥ 1.23 ॥

தீய மனத்தினனான துரியோதனனுக்கு விருப்பமானதை செய்வதற்காக இங்கே போருக்காக கூடியிருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.

ஸம்ஜய உவாச।
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேந பாரத।
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்॥ 1.24 ॥

பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்।
உவாச பார்த பஷ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி॥ 1.25 ॥

சஞ்ஜயன் கூறினார்: மன்னா ! அர்ஜுனன் இவ்வாறு கிருஷ்ணரிடம் கூறியதும் அவர் சிறந்த அந்த தேரை இரண்டு அணிகளுக்கு நடுவிலும் பீஷ்மர் துரோணர் மற்றும் எல்லா மன்னர்களும் எதிரிலும் நிறுத்தி, அர்ஜுனா , கூடியிருக்கின்ற இந்த கௌரவர்களை பார் என்று சொன்னார் .
தத்ராபஷ்யத்ஸ்திதாந்பார்த: பித்ருநத பிதாமஹாந்।
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ருந்புத்ராந்பௌத்ராந்ஸகீம்ஸ்ததா॥ 1.26 ॥

அர்ஜுனன் அங்கே இரண்டு அணிகளிலும் இருக்கின்ற தந்தையர், பாட்டன்மார், ஆச்சாரியார்கள், மாமன்மார், சகோதரர்கள், பிள்ளைகள், பேரங்கள், தோழர்கள் , மாமனார்கள், மற்றும் நண்பர்களை பார்த்தான்.

ஷ்வஷுராந்ஸுஹ்ருதஷ்சைவ ஸேநயோருபயோரபி।
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்॥ 1.27 ॥

உறவினர் அனைவரையும் நன்றாக பார்த்த அர்ஜுனன் ஆழ்ந்த இரக்கத்தின் வசப்பட்டு நொந்த மனத்துடன் பின்வருமாறு கூறினான்.

அர்ஜுன உவாச।
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்।
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்॥ 1.28 ॥

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஷுஷ்யதி।
வேபதுஷ்ச ஷரீரே மே ரோமஹர்ஷஷ்ச ஜாயதே॥ 1.29

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! போரிடுவதற்காக கூடி நிற்கின்ற இந்த உறவினரை பார்த்து எனது அங்கங்கள் சோர்வடைகின்றன. வாய் வரள்கிறது. உடம்பு நடுங்குகிறது . மயிர்கூச்செறிகிறது.

காண்டீவம் ஸ்த்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே।
ந ச ஷக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந:॥ 1.30 ॥

கிருஷ்ணா ! எனது கையிலுருந்து வில் நழுவுகிறது. உடம்பு எரிகிறது. நிற்க முடியவில்லை, மனம் குழம்புவது போல் இருக்கிறது. விபரீதமான சகுனங்களையும் காண்கின்றேன்.

நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேஷவ।
ந ச ஷ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே॥ 1.31 ॥

கிருஷ்ணா ! போரில் உறவினரை கொல்வதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றி, அரசு, சுகம் இவை எதையும் நான் விரும்பவில்லை.

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச।
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா॥ 1.32 ॥

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச।
த இமே அவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச॥ 1.33 ॥

ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா:।
மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா: ஷ்யாலா: ஸம்பந்திநஸ்ததா॥ 1.34 ॥

கோவிந்தா ! யாருக்காக இந்த அரசும் சுக போகம்களும், விரும்பதக்கவையோ அந்த ஆச்சாரியார்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள், பேரங்கள், மைத்துனர்கள், சம்பந்திகள் எல்லோரும் தங்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்துவிட துணிந்து போர்களத்தில் நிற்கிறார்கள். அரசினாலும் சுகபோகங்களினாலும் எங்களுக்கு என்ன பயன்? உயிர் வாழ்ந்து தான் என்ன லாபம் ?

ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ அபி மதுஸூதந।
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே॥ 1.35 ॥

கிருஷ்ணா ! நான் கொல்லபட்டலும் மூன்று உலகங்களையும் பெறுவதாக இருந்தாலும் கூட இவர்களை கொல்ல மாட்டேன். வெறும் அரசுக்காக இவர்களை கொள்வேனா ?

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜநார்தந।
பாபமேவாஷ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந:॥ 1.36 ॥

கிருஷ்ணா ! திருதராஷ்டிரரின் பிள்ளைகளை கொல்வதால் நமக்கு என்ன இன்பம் கிடைக்க போகிறது ? அவர்கள் பெரும் பாவிகளே ஆனாலும் அவைகளை கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும்.

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்।
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ॥ 1.37 ॥

மாதவா ! உறவினராகிய துரியோதனன் முதலானோரை கொல்வது நமக்கு தகாது. உறவினரை கொன்றுவிட்டு நாம் எப்படி சுகத்தை அனுபவிக்க முடியும்.

யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோபஹதசேதஸ:।
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்॥ 1.38 ॥

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும்।
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஷ்யத்பிர்ஜநார்தந॥ 1.39 ॥

கிருஷ்ணா ! பேராசையால் விவேகம் இழந்த மனத்தினராகிய இவர்கள் குல நாசத்தால் உண்டாகும் தீங்கையும், நண்பர்களை வஞ்சிப்பதால் விளைகின்ற பாதகத்தையும் தெரிந்துகொள்ளவில்லை. அதனை தெளிவாக அறிந்து இருக்கின்ற நாம் ஏன் அந்த பாவத்திலிருந்து காத்துகொள்ள கூடாது.

குலக்ஷயே ப்ரணஷ்யந்தி குலதர்மா: ஸநாதநா:।
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ அபிபவத்யுத॥ 1.40 ॥

குலம் நாசமடையும் போது, காலங்காலமாக இருந்து வருகின்ற குல தர்மங்கள் அழிகின்றன. தர்மம் குன்றுவதால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.

அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:।
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:॥ 1.41 ॥

விருஷ்ணி குலத்தில் உதித்தவனே கிருஷ்ணா ! அதர்மம் மிகுவால் குலமகளிர் கற்பை இழப்பார்கள். பெண்கள் கற்பை இழப்பதால் ஜாதி கலப்பு உண்டாகிறது.

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச।
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:॥ 1.42 ॥

ஜாதி கலப்பினால், குலத்தை அழித்தவர்களுக்கும் குலதினருக்கும் நரகமே கிடைக்கிறது. அவர்களுடைய முன்னோர்கள் சாதம் மற்றும் தண்ணீரால் செய்யபடுகின்ற கிரியைகளை இழந்து விடுவார்கள்.

தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:।
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஷ்ச ஷாஷ்வதா:॥ 1.43 ॥

குலத்தை அழித்தவர்களின் தீமைகளால் ஜாதிகலப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக காலங்காலமாக இருந்து வருகின்ற ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிகின்றன.

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந।
நரகே நியதம் வாஸோ பவதீத்யநுஷுஷ்ரும॥ 1.44 ॥

கிருஷ்ணா ! குல தர்மங்களை இழந்தவர்கள் நரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்।
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா:॥ 1.45 ॥

அரசு போகத்தை அனுபவிப்பதற்கான ஆசையால் உறவினரை கொல்லவும் முன் வந்தோம் நாம். இந்த மகாபாவத்தை செய்வதற்கு துணிந்தோமே !

யதி மாமப்ரதீகாரமஷஸ்த்ரம் ஷஸ்த்ரபாணய:।
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத்॥ 1.46 ॥

எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னை கையில் ஆயுதமுடைய துரியோதனன் முதலானோர் போரில் கொல்வார்களேயானால் கூட அது எனக்கு மிகுந்த நன்மை செய்வதே ஆகும்.

ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஷத்।
விஸ்ருஜ்ய ஸஷரம் சாபம் ஷோகஸம்விக்நமாநஸ:॥ 1.47 ॥

சஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு சொல்லிவிட்டு அம்போடு கூடிய தனது வில்லை எறிந்தான் அர்ஜுனன், துக்கத்தில் துடிக்கின்ற மனத்துடன் போர்களத்தில் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அர்ஜுனவிஷாதயோகோ நாம ப்ரதமோ அத்யாய:॥ 1 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அர்ஜுன விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம் நிறைவுற்றது.

விளக்கம்:

பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் யுத்தகளத்தை கண்ட உடன் பதற்றம் அடைந்தான். அந்த பதற்றத்திற்கு காரணம் அவனுக்கு இந்த உலகத்தின் (அல்லது ) பிரபஞ்சத்தின் பூரண உண்மை தெரியாததால் அவன் அவ்வாறு பதற்றத்துக்கு உள்ளானான். தர்மதிற்கான யுத்தத்தில் தனது உறவினர்களும் கொல்லபடுவார்களே என்று அஞ்சினான். இவ்வாறு அஞ்சி நடுங்கி கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் பூரண உண்மையை கூறி அவனது புத்தியை விழித்தெழ செய்தார்.

தொடரும்...