இலங்கையில் இன்று முதல் மேலும் அதிகரிக்கும் மின் வெட்டு நேரம்!
#SriLanka
Lanka4
2 years ago
நாடு முழுவதும் இன்றும் மின் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நாடு முழுவதும் சுமார் 5 மணிநேர மின்விநியோக தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
இதன்படி, A,B,C ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் பகுதிகளுக்கான மின் விநியோக தடை 4 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களுமாக ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.