தேவையான டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பஸ்களுக்கு அனுமதி
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து தேவையான டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 45 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நாடு முழுவதும் உள்ள மீதமுள்ள டிப்போக்களுக்கும் அதிக எரிபொருள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறையில் ஈடுபடும் பஸ்களுக்கு போதியளவு டீசலை வழங்குவதற்கு அமைச்சு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிலுள்ள பல டிப்போக்கள், தனியார் பஸ்களுக்கு இன்று டீசலை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்க தெரிவித்தார்.
தொலைதூர பஸ்களுக்கு 150 லீற்றர் டீசலும், குறுகிய தூர பஸ்களுக்கு 100 லீற்றர் டீசலும் விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.