இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகின!
இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தமையால் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கடலோரக் காவல் படைக்கு(ICGS) சொந்தமான VAJRA ரோந்து கப்பல் தூத்துக்குடிக்கு தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களை பிடித்து விசாரித்து அவர்களது படகை பறிமுதல் செய்து உள்ளனர்.
இவ்வாறு இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் படகுடன் நாளை அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து கடலோர பாதுகாப்பு குழும(marine) போலீசாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்க உள்ளனர்.
புத்தளம் மாவட்ட பதிவு எண் கொண்ட படகில் பயணித்த ஐவரது விபரங்கள் வெளியாகியுள்ளன.
படகு எண் IMUL -A 0108 PTM
மீனவர்களின் விபரம்
1- JPS PIGERU – NIGOMBO
2- DGS FRENANDO – NIGOMBO
3- WNK FRENANDO – CHILAW
4- WMAA FRENANDO – CHILAW
5- VMRI ANDADI – CHILAW