நாட்டில் அதிர்ஷ்டத்துக்கும் எதிர்வரும் காலங்களில் தட்டுப்பாடு! மக்கள் கவலை
நாட்டில் அதிர்ஷ்டத்துக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அதிர்ஷ்டப் பிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்களை அச்சடிக்கும் காகிதத் தாள் தட்டுப்பாட்டினாலேயே அதிர்ஷ்ட லாப சீட்டுக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை பற்றி தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லொத்தர் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையாக 12 வகையான நாளாந்த அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்கள் விற்பனைக்காக கிடைப்பதாகவும் ஆனால், தற்போது 5 வகையான டிக்கெட்டுக்களே கிடைக்கின்றன. அவையும் கேள்விக்கு குறைந்த அளவிலேயே கிடைப்பதாகவும் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் அதிர்ஷ்ட லாபச் சீட்டு லொத்தர்களை வாங்க அதன் அதிர்ஷ்டப் பிரியர்கள் முண்டியடிப்பதால், காலை 8 மணிக்குள்ளாகவே கையிருப்பிலுள்ள லொத்தர்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களை வாங்க கடைக்கு வரும் அதன் வாடிக்கையாளர்கள் கடைகள் மூடப்பட்டிருப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைக் காண முடிகின்றது.