ஜயந்த கெட்டகொட சபையில் திரவ பால் தட்டுப்பாடு செய்தி தொடர்பாக சபாநாயகரிடம் புகார்
#SriLanka
#Parliament
Mugunthan Mugunthan
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிற்றுண்டிச்சாலையில் திரவப் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகளை குற்றஞ்சாட்டி அசௌகரியத்துடன் நடந்துகொண்டதாக வெளியான செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த விடயத்தை முதலில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவும் இது தொடர்பில் சிறப்புரிமை கேள்வியொன்றை எழுப்பினார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியும் கருத்து வெளியிட்டதுடன், சபாநாயகரும் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார்.