தமது நாட்டுக்கான சேவையை நிறுத்திய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள முக்கிய அவசரமான எச்சரிக்கை
ரஷிய நாட்டில் நடவடிக்கைகளை நிறுத்திவைத்துள்ள மேற்கத்திய நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்ற முடியும் என ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் இருந்து பல அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் தொழில் முயற்சிகள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டன.
இந்த பொருளாதாரத் தடைகள் ரஷியாவின் மத்திய வங்கி உட்பட அதன் நிதித் துறையின் பெரும்பகுதியை பாதித்துள்ளன, ரஷிய பொருளாதாரத்தில் இது ஒரு ஆழ்ந்த மந்தநிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ரஷிய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின், இது தொடர்பாக ஒரு சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு உரிமையாளர்கள் நியாயமற்ற முறையில் நிறுவனத்தை மூடினால், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களின் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அதன் உரிமையாளரின் முடிவைப் பொறுத்து, நிறுவனத்தின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கும். இந்த நிறுவனங்கள் சொத்துக்கள் கைப்பற்றபட்டு வேலை செய்ய விரும்பும் மாற்று நிறுவனங்களுக்கு வழங்கபடும், என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெலன், தற்போதுள்ள மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் விளைவாக ரஷியாவின் பொருளாதாரம் அழிவடையும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.