ஆட்சியைக் கவிழ்க்க இடமளிக்கமாட்டோம்! - அமைச்சர் நாமல் திட்டவட்டம்
Prasu
2 years ago
"எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது. பொருளாதார ரீதியில்தான் நாம் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். இந்நிலையில், ஆட்சி கவிழ ஒருபோதும் இடமளியோம். பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவு காண்பதே எமது திட்டம்."
- இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தேசிய அரசமைப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், எதிரணி தரப்பில் இருந்தே இவ்வாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சர்வகட்சி மாநாடென்பது பொருத்தமான நடவடிக்கை. அதில் பங்கேற்று, கட்சி அரசியலுக்கு அப்பால், நாடு தொடர்பான யோசனைகளை கட்சிகள் முன்வைக்க வேண்டும்" - என்றார்.