16ம் நாள் போர் - உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷியாவின் பிரமாண்ட படை...!
#world_news
#Ukraine
#Russia
Mugunthan Mugunthan
2 years ago
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது.
இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷிய படைகளின் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதை மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள் படங்கள் உறுதிபடுத்துகின்றன.