பால்மா குடித்தவர்களெல்லாம் பனங்கட்டியும் தேநீரையும் தான் குடிக்க வேண்டும்.

#SriLanka #Milk Powder #prices
பால்மா குடித்தவர்களெல்லாம் பனங்கட்டியும் தேநீரையும் தான் குடிக்க வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 300 – 400 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தயாராகி வருகிறது. 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பில்  அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டாரவிடம் வினவியது. உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 4,800 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையினால் இவ்வாறான அதிகரிப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், அந்த விலைகள் நாளை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் பால்மாவின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால் மாவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்க வேண்டாம் என தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மா 1,345 ரூபாவிற்கும், 400 கிராம் பால் மா பாக்கெட் 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.