யுக்ரேன் ரஷ்யா யுத்தத்தினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி: சொல்கிறார் நிதி அமைச்சர் பசில்
நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு தம்மால் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறேனும் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது. தற்போது யுக்ரேன் ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிவாரணங்களை வழங்க முழுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.