கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்து - முழு ஐரோப்பிய நாடுகளுக்கும் எச்சரிக்கை

Nila
2 years ago
கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்து - முழு ஐரோப்பிய நாடுகளுக்கும் எச்சரிக்கை

உக்ரைன், செர்னோபில் அணு மின் நிலையம் சேதமடைந்திருப்பதால் கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15ம் நாளாக போர் தொடுத்துள்ளது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படையினர் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், செர்னோபில் அணு உலையில் மின்வசதியை தரக்கூடிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை விரைவில் சரி செய்ய வேண்டும் எனவும், அணு எரிபொருள் சேமிப்பு வசதியினுடைய குளிரூட்டக்கூடிய அமைப்பிலிருந்து அதிகமாக கதிர்வீச்சு வெளிவரும் ஆபத்து உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ரஷ்யா மேற்கொள்ளும் அபாயகரமான நடவடிக்கைகளால் ஐரோப்பா, ஆபத்தில் மூழ்கியிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதேவேளை, செர்னோபில் அணுமின் நிலையத்தின் உடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் உக்ரைன் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA இதனை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!