பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தால் போர் முடிவுக்கு வருமா?- புதின் தகவல்

#Ukraine #Russia
Keerthi
2 years ago
பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தால் போர் முடிவுக்கு வருமா?- புதின் தகவல்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த மாதம் 20-ஆம் தேதி  போர் தொடுத்தது. இருவாரத்திற்கும் மேலாகியும் உக்ரைன் மீதான உக்கிர போரை ரஷியா நிறுத்தவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷியா, தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. 

உக்ரைன் படைகளும் கடும் சவால் அளிப்பதால்,  ரஷியாவில் எளிதில் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை.  ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும் அதையெல்லாம் ரஷிய பொருட்படுத்த மறுத்து பதிலுக்கு பதில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், பதற்றம் நீடித்த படியே உள்ளது. 

இருப்பினும், ஒருபுறம் உக்ரைன் - ரஷியா இடையே பேச்சுவார்தைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் அண்மையில் துருக்கியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. 

எனினும்,  ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.  "பேச்சுவார்த்தையில் சில நேர்மறையான முன்னேற்றங்கள்  ஏற்பட்டுள்ளதாக எங்கள் தரப்பினர் என்னிடம் கூறினர்” என்று பெலாரஸ் அதிபருடனான ஆலோசனையின் போது புதின் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!