ஸ்விட்சர்லாந்தில் தடை செய்யபடும் மிகமுக்கிய உணவுகள் - கவலையில் சாப்பாட்டு பிரியர்கள்
சுவிட்சர்லாந்தில் டைட்டானியம் டை ஆக்சைடு உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் உணவில் டைட்டானியம் டை ஆக்சைடுக்கு (Titanium dioxide) தடை விதிப்பதாக இந்த வாரம் அறிவித்தது. இந்த தடை வரும் மார்ச் 15 செவ்வாய்க்கிழமை முத்தால் படிப்படியாக தொடங்கி, வரும் செப்டம்பர் 15, 2022 முழுமையாக அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டானியம் டை ஆக்சைடு முக்கியமாக மிட்டாய் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு சேர்க்கையாகும். இது உணவுக்கு வெள்ளை நிறத்தை அளிக்கிறது. இது பற்பசைகள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் பிற அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் இது முதன்முதலில் 1966-ல் உணவில் பயன்படுத்தப்பட்டது மற்றும் 2008-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உணவுப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மே 2021-ல் அதன் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலிலிருந்து டைட்டானியம் டை ஆக்சைடு சேர்க்கையை நீக்கியது. சுவிட்சர்லாந்து பின்னர் உணவு சேர்க்கையின் விதிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்ப கொண்டு வர முடிவு செய்தது.